Followers

சிறுமுகை அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த பாகுபலி காட்டு யானை, தோட்டத்தின் மின் வேலியை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 சிறுமுகை அருகே வாழைத் தோட்டத்திற்குள் புகுந்த பாகுபலி காட்டு யானை, தோட்டத்தின் மின் வேலியை உடைத்துக் கொண்டு செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.


வீடியோவை பார்க்க:https://youtu.be/BfSCWf87K8A?si=P5TWqwmMLJB0nfiD




கோவை வனக்கோட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில், காட்டு யானை மற்றும் ஏராளமான வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அடர் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் நீர் நிலைகளைத் தேடி அலையும் காட்டு யானைகள், இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, வனப்பகுதியை ஒட்டியுள்ள தோட்டங்களில் புகுந்து விடுகிறது.


மேலும் தோட்டத்துக்குள் புகும் யானைகள், விவசாய விளைபொருள்களை நாசம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகளை விவசாயிகள் முன்வைக்கின்றனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணி அளவில், சிறுமுகை அருகே லிங்காபுரம் அடுத்துள்ள காந்தையூரில் கணேசன் மற்றும் மூர்த்தியின் வாழைத் தோட்டங்களுக்குள் பாகுபலி காட்டு யானை புகுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் சிறுமுகை வனத்துறையினர், தோட்டத்துக்குள் புகுந்த பாகுபலி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். மேலும் யானையை விரட்டும் போது, விவசாயிகள் லைன் ஒன்னும் இல்லை  (மின் இணைப்பு இல்லை ) நீ போ.. போ.. என்று சத்தம் போட்டு விரட்டினர் மெதுவாக பாகுபலி யானை மின் இணைப்பை மெதுவாக தாண்டி வனப் பகுதிக்கு சென்றது இந்த காட்சி அங்கு விரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த விவசாய ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது


நமது செய்தியாளர் வடிவேல் 




Post a Comment

Previous Post Next Post