டாப்சிலிப்பில் யானை பொங்கல் விழா...
வீடியோவை பார்க்க:
⬇️
https://youtu.be/9jitisKPgcA?si=50PYj6dgLYUuhVI-
பொள்ளாச்சி, சேத்துமடை அடுத்துள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி வனப்பகுதியில், வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்குள்ள யானைகள், 'கும்கி'களாக பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு மாவட்டங்களிலும் காட்டு யானைகளை பிடிக்க இங்கு இருந்து தான், 'கும்கி' யானைகள் செல்கின்றன.யானைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், ஆண்டுதோறும், மாட்டுப்பொங்கல் நாளன்று, யானை பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நாளை டாப்சிலிப் கோழிகமுத்தி யானை முகாமில், காலை 9:30 மணிக்கு பொங்கல் விழா நடக்கிறது. அதில், யானைகளுக்கு பொங்கல் வைத்து படைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்....
நமது செய்தியாளர் வடிவேல்
Tags:
Elephant