குன்னூர் மலை இரயில் பாதையில் குட்டியுடன் 10 காட்டுயானைகள் முகாம் .தேசிய நெடுஞ்சாலையில் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை
சமவெளி பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் காட்டுயானைகள் உணவு, மற்றும் தண்ணீர் தேடி குன்னூர் நோக்கி படையெடுக்கத்துவங்கியுள்ளன. மேலும் குன்னூரில் பலாப்பழம் சீசன் துவங்கியுள்ளது. இதனை ருசிக்க யானை கள் வருகை துவங்கியுள்ளது. இந்த நிலையில் குன்னூர் மேட்டுப்பாளையம் மலை பாதையில் குன்னூர் ரணிமேடு இரயில் நிலையத்தில் குட்டியுடன் 10 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டுயானைகள் கூட்டம் மலைபாதையில் காட்டேரி பூங்கா அருகே சாலையை கடந்தது. செல்ல வாய்புள்ளதாலும் இரவு நேரங்களில் காட்டுயானைகள் கூட்டம் சாலையை அடிக்கடி கடந்து செல்ல வாய்புள்ளதாலும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும் என குன்னூர் வனசரகர் ரவீந்தரநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்