Followers

சிவராத்திரி அன்று யானைகளை இரு கை கூப்பி வணங்கியவாறு சிவராத்திரியை முடித்து கொண்ட பொதுமக்கள்

 சிவராத்திரி அன்று யானைகளை இரு  கை கூப்பி வணங்கியவாறு சிவராத்திரியை முடித்து கொண்ட பொதுமக்கள்





கோவை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க குளிர்பானங்கள், குளிர்ச்சி தரக்கூடிய பழங்களை வாங்கி சாப்பிட்டு வருகிறார்கள். வெயில் காரணமாக மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றன. கடந்த ஒன்பதாம் தேதி சிவராத்திரி அன்று இரவு மதுக்கரை வன பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானைகள் கோவை மாவட்டம் அருகே உள்ள அறிவொளி நகர் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கேஸ்வரர் கோயில் அருகே யானைகள் தஞ்சம் அடைந்தது அங்கு பூஜையில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் யானையைக் கண்டு சிவனே போற்றி யானைக் குட்டியோடு வந்துள்ளது யாரும் தொந்தரவு செய்யாதீங்க நீங்களும் சத்தம் போடாதீர்கள் என்று சொல்லியவாறு இரு கைகளை தூக்கி வணங்கியவாறு  பொதுமக்கள் இருந்தனர் இந்த சொல்லை கேட்ட யானைகள் சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு மெதுவாக வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது இந்த காட்சி அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது


 இதைப் பற்றி நமது தலைமை செய்தியாளர் ஸ்வேதா தெரிவிக்கையில்:


நாம் பார்க்கும் அடர்ந்த காடுகள், யானைகள் போன்ற விலங்கினங்கள் இல்லாமல் உருவாகி இருக்க முடியாது. இதைப் புரிந்துகொள்ள யானையின் இயல்புகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. ``வாழ்வதற்காக உண்; உண்பதற்காகவே வாழாதே” என்பது நமக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், நாம் கொண்டாடும் யானைகளின் வாழ்வே உணவைச் சுற்றித்தான் சுழல்கிறது அதனால் யானைகளை கண்டால் யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்றார்


நமது செய்தியாளர் ஸ்வேதா

Post a Comment

Previous Post Next Post