Followers

கோவை, மதுக்கரை பகுதியில் ரேஷன் கடையில் அரிசி மூட்டைகளை சேதப்படுத்தியதாக குரி யானை அருகே பட்டாசு வீசியவர் மீது வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர்

 கோவை,  மதுக்கரை பகுதியில் ரேஷன் கடையில் அரிசி மூட்டைகளை சேதப்படுத்தியதாக குரி யானை அருகே பட்டாசு வீசியவர் மீது வனத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் 



 


கோவை  மதுக்கரை பகுதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளது. அங்கு ஏராளமான வன விலங்குகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணி அளவில் மதுக்கரை அருகே உள்ள குவாரி குடியிருப்பு அப்பகுதிக்கு குட்டியுடன் வந்த 2 காட்டு யானைகள் ரேஷன் கடையின்  இருந்த அரிசி மூட்டைகளை உன்ன துவங்கியது.  அரிசி மூட்டை எடுத்து சாலையில் கொட்டி தின்று கொண்டு இருந்த யானை அருகே அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் பட்டாசு வீசினார். உடனே அங்கு இருந்து யானைகள் திரும்பி வனப்பகுதியை நோக்கி சென்றது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி யானைகளை வனப் பகுதியில் விரட்ட பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்களை பயன்படுத்த தடை விதித்து உள்ளனர். மேலும் அதனை பயன்படுத்தி வனவிலங்குகளை அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த  சம்பவம் வன ஆர்வலர் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே வனத்துறை அதிகாரிகள் உடனடியாக அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாக உள்ளது.


நமது செய்தியாளர் கோவை நேசராஜ்

Post a Comment

Previous Post Next Post