கோவை மாவட்டம் பேரூர் அருகே உலா வந்த ஆண் காட்டு யானை தற்போது தடாகம் பிரிவு, மருதமலை சுற்று, யானை மடுவு சராக வனப்பகுதிக்குள் அனுப்பப்பட்டதாக வனத்துறை தகவல்
கோவை மாவட்டத்தில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. மேலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான வெப்பம் நிலவுகிறது. பொதுவாக கோடை காலத்தில் கோவையின் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் என இருக்கும். ஆனால் தற்போது டிகிரி 34 செல்சியஸ் வரை பதிவாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது.
மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் மரம், செடி, கொடிகள் கருகி வருகின்றன. பசுந்தீவனம் மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் அலைந்து திரிகின்றன. இதையொட்டி கோவை பேரூர் அடுத்த வேடப்பட்டி செல்லும் சாலையில் நிர்மல் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை 5 மணிக்கு ஒற்றை காட்டு யானை உலா வருவதாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் யானையை வனப் பகுதிக்குள் விரட்ட முடிவு எடுத்து விரட்டினர்
அப்போது பச்சாபாளையத்தில் இருந்து வெளியேறிய யானை, சிறுவாணி சாலையை கடந்து எதிர்புறம் உள்ள குளத்திற்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது, அப்பகுதி மக்கள் கூச்சலிட்டவாறு ஓடியதால், மிரண்ட யானை திடீரென சாலை ஓரம் இருந்த கடைகளுக்குள் புகுந்துள்ளது.
அப்போது, அந்த கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த மருதமுத்து என்பவரை துதிக்கையில் தள்ளியது இதில் கீழே விழுந்த அவருக்கு முதுகில் காயம் ஏற்பட்டது இதனையடுத்து, அவரை மீட்ட வனத்துறையினர், சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்நிலையில், முதியவரை யானை கீழே தள்ளிவிடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,
இரவு முழுவதும் வேடப்பட்டி, பேரூர் பகுதியில் சுற்றி வந்த யானை, 18.3.2024 தேதி காலை சுமார் 6.00 மணியில் கோவை வனச்சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்று, யானை மடுவு சராக வனப்பகுதிக்குள் நல்ல முறையில் அனுப்பப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது
நமது செய்தியாளர் சக்திவேல்