வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானையை யானை மொழியில் பேசி வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர் வால்பாறை வனத்துறையினர்
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும் தென்மேற்கு பருவ மழையின்போது பசுமை திரும்பியதும், கேரளா வனப் பகுதியில் இருந்து நூற்றக்கணக்கான யானைகள் வால்பாறைக்கு இடம்பெயர்வது வழக்கம். ஜூன் முதல் பத்து மாதங்களுக்கு மேலாக இந்தப் பகுதியில் முகாமிடும் யானைகள், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு தேயிலைத் தோட்டங்களில் கூட்டமாகவும், தனித்தனியாகவும் முகாமிடுகின்றன.
பகல் நேரத்தில் தேயிலைத் தோட்டத்தை ஒட்டியுள்ள துண்டுச் சோலை காடுகளில் முகாமிடும் யானைகள், இரவு நேரத்தில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகிறது இதை தடுப்பதற்காக வனத்துறை சார்பில் வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர் அமைக்கப்பட்டு இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் பொள்ளாச்சி வால்பாறை நெடுஞ்சாலையில் அருகே புது தோட்டம் பகுதியில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை ஒன்று தேயிலை தோட்டத்தில் நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அடிப்படையில் விரைந்து வந்த வனவிலங்கு மோதல் தடுப்பு குழுவினர்கள் யானை அருகே சென்று வனப்பகுதிக்குள் செல்லுமாறு யானை மொழியில் பேசி வனப்பகுதிக்குள் யானை அனுப்பி வைத்தனர்
இந்த காட்சியை பற்றி அங்குள்ள பொதுமக்கள் தெரிவிக்கையில் வனத்துறை சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எந்த பொருள்களும் கையில் இல்லாமல் வாய் மொழியிலேயே பேசி வனப்பதிகள் அனுப்பி வைப்பது மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது மேலும் யானைகளைப் பற்றி சுற்றுலா பயணிகளுக்கு புரிதல் இருக்க வேண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மது பாட்டில்கள் வனப்பகுதி ஒட்டி உள்ள பகுதிகளில் வீசுவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்தனர்
நமது செய்தியாளர் வடிவேல்