சாந்தமான படையப்பா யானையை சீண்டிய கேரளா அரசு பேருந்து
மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டு யானை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆக்ரோஷத்துடன் வலம் வந்தது. சாதுவான படையப்பாவுக்கு மதம் பிடித்ததால் வாகனங்களை சேதங்களை ஏற்படுத்தியது. மேலும் ஆக்ரோஷமாக நடமாடிய படையப்பாவை அடர்ந்த வனத்தினுள் விரட்டவும், தேவைப்பட்டால் மயக்க ஊசி செலுத்தி வேறு பகுதியில் விடுமாறும் வனத்துறை அமைச்சர் சசீந்திரன் பிப்.18ல் உத்தரவிட்டார்.
மாட்டுபட்டி எஸ்டேட் டாப் டிவிஷனில் முகாமிட்ட படையப்பாவை பிப்.19ல் வனத்துறை தலைமை அதிகாரி அருண் தலைமையில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் கொண்ட இரண்டு ' ட்ரோண்' கள் மூலம் கண்காணித்தனர். அதில் மதம் பிடித்த தன்மை குறைந்ததாக தெரிய வந்ததால் தற்போது யானை தடுப்பு பிரிவு அதிகாரி ஜெயன் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு கண்காணித்து வருகின்றனர் இந்நிலையில் மூணார் தேனி சாலை தேவிகுளம் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய படையப்பா யானை சாலையை கடக்கும் பொழுது எதிர்பார்க்காமல் வந்த கேரளா அரசு பேருந்து யானை முன்னே நின்றது அப்போது மெதுவாக சென்ற படையப்பா யானை அரசு பேருந்து முன் பக்கம் கண்ணாடியை தனது கனமான தந்தத்தைப் உரசியது பின்னர் ஜன்னல் வழியாக துதிக்கை நீட்டி உணவை தேடியது இந்த காட்சி அப்ப பேருந்தில் பயணித்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்
இதைப் பற்றி பொதுமக்கள் தெரிவிக்கையில் படையப்பா யானை சாலையில் நடந்து வரும் பொழுது எக்காணத்தைக் கொண்டும் வாகனங்கள் நிற்கக்கூடாது என்று வனத்துறை தெரிவித்துள்ளனர் ஆனால் சில வாகனங்கள் யானையை புகைப்படம் எடுப்பதும் இந்த பேருந்தை போல நடு சாலையில் நிறுத்தி விட்டு யானை வாகனத்தை தாக்கியது என்று கூறுவதும் தவிர்க்க வேண்டும் எப்பொழுதும் யானை மட்டும் குறை சொல்கிறார்கள் பொதுமக்களும் யானைகளை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினர்
நமது செய்தியாளர் வடிவேல்