வால்பாறை-சாலக்குடி சாலையில் ஆரன் ஒழித்ததால் கோபம் கொண்ட காட்டு யானை காரை தாக்கியது இதனால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர
வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானைகள் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இதன் காரணமாக இந்த சாலையில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்க அளிக்கப்பட்டுள்ளது
தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக வால்பறை வனப்பகுதியில் இருந்து கேரள வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு செல்லும் காட்டு யானைகள் சில நேரங்களில் சாலையோர பகுதிகளில் முகாமிடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வால்பாறை-சாலக்குடி சாலையில் காட்டு யானை முகாமிட்டு, சாலையோரத்தில் இருந்த மரக்கிளைகளை முறித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று யானை முன்னே வந்து நின்று ஆறனை ஒழித்ததால் கோபம் கொண்ட காட்டு யானை சட்டென்று திரும்பி காரை தாக்கியது பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது இந்த காட்சி மற்றொரு முனையில் நின்ற கார் ஓட்டுநர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது
இதைப்பற்றி சாலக்குடி வனத்துறை தெரிவிக்கையில்
அதிரப்பள்ளி சோதனை சாவடியை கடக்கும் வாகனங்கள் எப்பொழுதும் கவனமுடன் செல்ல வேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் வனச்சாலை இறங்கக் கூடாது யானைகள் நின்றால் வாகனத்தை பின்னோக்கி இயக்கி யானைகளுக்கு வழி விட வேண்டும் என்று நாங்கள் அறிவுறுத்தி வருகிறோம் என்றனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் வடிவேல்