ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் சாலையோர தடுப்பு சுவரில் ஹாயாகப் படுத்திருந்த சிறுத்தை..
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் இங்கு சிறுத்தை புலி கரடி யானை அதிகமாக காணப்படுகிறது இந்த வனப் பகுதிகளில் மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள வன விலங்குகள் வனச்சாலையைக் கடந்து மற்றொரு வனப்பகுதிக்கு செல்வது வழக்கமான ஒன்றுதான் இந்நிலையில் மூன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவா மீது ஞாயிற்றுக்கிழமை சிறுத்தை படுத்திருந்தது. இதனை அவ்வழியாக காரில் சென்றவர்கள் தங்களது கைப்பேசியில் படம் மற்றும் விடியோ பதிவு செய்தேன். வாகனத்தின் முகப்பு வெளிச்சத்தைக் கண்ட சிறுத்தை மெதுவாக எழுந்து வனப் பகுதிக்குள் சென்று மறைந்தது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்
வனச்சாலையில் சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் நடமாடுவதால் வாகனங்களில் செல்வோா் வாகனத்தை விட்டு கீழே இறங்கக் கூடாது, வன விலங்குகள் அருகே வாகனத்தை நிறுத்தக் கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நமது செய்தியாளர் முருகானந்தம்
Tags:
Erode talavadi