உணவு பற்றாக்குறை காரணமாக டாப்ஸ்லிப் இருந்த கும்கி யானைகள் வால்பாறை அருகே உள்ள மானாம்பள்ளிக்கு இடமாற்றம்
பொள்ளாச்சியை அடுத்தஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உள்பட்ட உலாந்தி வனச் சரகப் பகுதியில் கோழிகமுத்தி, சின்னாறு ஆகிய இரண்டு யானை வளர்ப்பு முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் கலீம் (47), ராமு (43), கபில்தேவ் (30), சூர்யா (39), பரணி (27), வெங்கடேஷ் (27), மாரியப்பன் (24), ராஜவர்த்தன் (14), தமிழன் (7), சுயம்பு (15) ஆகிய 10 ஆண் யானைகளும், விஜயலட்சுமி (60), சிவகாமி (62), செல்வி (53), சாரதா (58), வள்ளி (67), கல்பனா (33), துர்கா (17), அபிநயா (7) ஆகிய 8 பெண் யானைகளும் வளர்க்கப்படுகின்றன.
வனப்பகுதியில் இருந்து விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டுவதற்கும், டாப்சிலிப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானை சவாரி செல்வதற்கும் இந்த வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் மே வரையிலான காலகட்டத்தில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் தற்போது பருவமழை பொய்த்து போனாதால் வனப்பகுதிகளில் வரட்சி நிலவிகிறது இந்நிலையில் டாப்ஸ்லிப்பில் வளர்க்கப்படும் யானைகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டதால் களிம், சின்னதம்பி, சஞ்சீவ், காவேரி, தேவி ஆகிய கும்கி யானைகளை வால்பாறை அடுத்துள்ள மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு மாற்றப்பட்டது இங்கு யானைகளுக்கு தேவையான மூங்கில் மற்றும் புல்களை சாப்பிட்டு காலை மாலை இரு வேளையிலும் ஆற்றில் குளித்து விளையாடி வருகிறது
கும்கி யானை பாகன் தெரிவிக்கையில்: மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தினசரி கும்கி யானைகளை கண்காணித்து பாகங்களுக்கு தேவையான சமையல் மற்றும் தங்கும் இடம் அமைத்துக் கொடுத்துள்ளார் இங்கு எங்களுக்கு சிறப்பாக உள்ளது என்றனர்
நமது செய்தியாளர் வடிவேல்