Followers

கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட 25 புள்ளி மான்கள் இன்று சாடி வயல் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

 கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட 25 புள்ளி மான்கள் இன்று சாடி வயல் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. 






கோவை: கோவை மாநகர மக்களின் பிரதான பொழுதுபோக்கு மையமாக காந்திபுரம் நேரு மைதானம் அருகேயுள்ள வஉசி உயிரியல் பூங்கா’ இருந்தது. இந்த பூங்கா ஏறத்தாழ 5 ஏக்கர் பரப்பளவில் கடந்த 1965-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்ப காலத்தில் குரங்கு, நரி,மான் உள்ளிட்ட விலங்கினங்கள், பெலிகன், வாத்து, ஈமு, கிளிகள் உள்ளிட்ட பறவையினங்கள், முதலை, பாம்புகள் என 500-க்கும்மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வந்தது பின்னர், பராமரிப்பதில் சிரமம் மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புச் சட்ட விதிமுறைகள் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட வெவ்வேறு பூங்காக்களுக்கு விலங்குகளை மாற்றம் செய்யப்பட்டன இந்த நிலையில்   வ.உ.சி பூங்காவில் பராமரிக்கப்படும் புள்ளி மான்களை மாற்றம் செய்திட அதன் புழுக்கைகளை ( faecal pellets ) ஆய்வகத்திற்கு (AIWC, Vandalur) அனுப்பப்பட்டு புள்ளி மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது.

 பின்பு மார்ச் 2024 மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி  மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடர்ந்து இவைகளை வனப்பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம்  கூண்டு கட்டமைக்கப்பட்டது.

ஆனைமலை புலிகள் காப்பகம் வனப் பாதுகாவலர் மற்றும்  கள இயக்குனர் , கோவை மாவட்ட வன அலுவலர், கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் போலுவம்பட்டி வன பணியாளர்கள், கோவை வனமண்டல வன கால்நடை அலுவலர் கோவை வ உ சி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் கோவை மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில்

 இன்று காலை ஆறு மணி அளவில் புள்ளி மான்கள் மொத்தம் 26 எண்ணிக்கை ( Spotted deers Adult male 10 + Adult female 11 + Fawn male 2 + Fawn female 3= total 26) பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப்பகுதியில் காலை 09: 20 மணியளவில் நல்ல முறையில் விடுவிக்கப்பட்டது.


விடுவிக்கப்பட்ட புள்ளி மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு  வருகிறது 


நமது செய்தியாளர்  வடிவேல்

Post a Comment

Previous Post Next Post