Followers

காட்டுமிராண்டி கூட்டத்தில் மாட்டிக்கொண்ட குட்டி யானை அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு

 காட்டுமிராண்டி கூட்டத்தில் மாட்டிக்கொண்ட குட்டி யானை அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு.                                   (வீடியோ லிங்க் ‌)

                                       ⬇️

 https://drive.google.com/file/d/10cjM0oukw6JOSgvqkQq2JlcfFnDGQTjL/view?usp=drivesdk


அசாம் :அசாம் மாநிலத்தில் மக்கள்தொகை அதிகரிப்பின் காரணமாக யானைகளின் இருப்பிடங்களை ஆக்கிரமிக்கப்படுவது அதிகரித்துள்ளது. இதனால் உணவை தேடி மனித குடியிருப்புக்குள் புகும் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் உருவாகிறது. இந்த காரணத்தினால் வருடத்திற்கு சராசரியாக 80 யானைகளுக்கும் அதிகமாக சாகின்றன. மேலும் 70 மனித உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

கடந்த 12 ஆண்டுகளில் 1330 யானைகள் உயிரிழந்துள்ளன" இந்நிலையில் அசாம் மாநிலம் அருகே உள்ள உதல்குரி பகுதியில் தேயிலை அதிகம் விளைவிக்கும் பகுதியாக உள்ளது இங்கு உணவு தேடி யானை கூட்டம்  வந்தது இந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த யானை குட்டி ஒன்று தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரிந்துள்ளது இதைப் பார்த்த பொதுமக்கள் யானை குட்டி அருகே சென்று புகைப்படம் எடுப்பதும் அதை தொந்தரவு செய்வதும் ஈடுபட்டனர் இதனால் அலறியபடி தேயிலைத் தோட்ட பகுதியில்  ஓடிய யானை குட்டி செய்வதறியாமல் அங்கும் இங்கும் ஓடியது இந்த காட்சி அக்கூட்டத்தில் இருந்து ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளவில் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது 


இதைப் பற்றி யானை பிரியர்கள் கூறுகையில்:

யானை கொடுமை செய்யும் வீடியோவை பார்த்தும் எங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது இவர்கள் மீது மிகவும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றனர்


நமது செய்தியாளர் வடிவேல் 

Post a Comment

Previous Post Next Post