Followers

குன்னூரில் வீட்டு வாசலில் தூங்கிய கரடி

 குன்னூரில் வீட்டு வாசலில் தூங்கிய கரடி  




நீலகிரி மாவட்டம் 75,% வனப்பகுதியும் தேயிலைத் தோட்டங்களும் உள்ளது மீதி உள்ள பகுதிகளில் கூடிய குடியிருப்பு உள்ளது இங்கு கரடி காட்டெருமை, சிறுத்தை போன்ற விலங்குகள் பகல் மற்றும் இரவு நேரங்களில் கிராம பகுதிகளில் தண்ணீர் உணவு தேடி நுழைகிறது. இந்நிலையில் குன்னூர்  பேரூந்து நிலையத்தின் அருகே  உள்ள ரேலிகாமவுண்டு குடியிருப்பு பகுதியில்  இரவு நுழைந்த கரடி ஒன்று வீட்டின் வாசலில்  ஓய்வெடுத்தது இதை பார்த்த பொதுமக்கள் சத்தம் எழுப்பியதால் மெதுவாக எழுந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது  இதைப்பற்றி குன்னூர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வனத்துறை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை அறிவுறுத்தி வருகிறது 


நமது செய்திகளை கரன்சி சிவகுமார்

Post a Comment

Previous Post Next Post