Followers

அதிரப்பள்ளி அருகே காட்டு யானைக்கு இனிப்பு வழங்குவதாக கூறி இடையூறு செய்த சுற்றுலாபயணி மீது வழக்கு பதிவு

 அதிரப்பள்ளி அருகே காட்டு யானைக்கு இனிப்பு வழங்குவதாக கூறி இடையூறு செய்த சுற்றுலாபயணி மீது வழக்கு பதிவு






வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இதன் காரணமாக இந்த சாலையில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக வால்பறை வனப்பகுதியில் இருந்து கேரள வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு செல்லும் காட்டு யானைகள் சில நேரங்களில் சாலையோர பகுதிகளில் முகாமிடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டையில் இருந்து வால்பாறை வந்த சுற்றுலா பயணிகள் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று விட்டு வரும் வழியில் யானை நிற்பதை கண்ட சுற்றுலா பயணிகளின் ஒருவர் யானைக்கு இனிப்பு யார் வழங்குகிறார்களோ அவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் அதைக் கேட்ட சவுக்கத் என்பவர் யானை அருகே சென்று இனிப்பை வீசி உள்ளார் கோபம் கொண்ட காட்டு யானை அவரை விரட்டியது இந்த காட்சி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சாலக்குடி வனத்துறைக்கு அனுப்பி உள்ளார் இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து வந்து சுற்றுலா பயணிகளின் வாகனத்தையும் பறிமுதல் செய்து சவுக்கத் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post