அதிரப்பள்ளி சாலையில் இருபுறம் வாகனத்தை நிறுத்தியதால் கோபம் கொண்ட காட்டி யானை காரை விரட்டியது
வால்பாறை அருகில் உள்ள கேரள மாநில எல்லை பகுதியான மளுக்கப்பாறை பகுதியில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் அடர்ந்த வனப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த நிலையில் மளுக்கப்பாறை-சாலக்குடி வனப்பகுதி சாலையில் ஆணக்காயம் மற்றும் அம்பலப்பாறை இடைப்பட்ட பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஆண் யானை ஒன்று சாலையில் நின்றது இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் சாலையில் இருபுறமும் வாகனத்தை நிறுத்தி இடையூறு செய்தனர் இதனால் கோபம் கொண்ட காட்டு யானை வாகனத்தை ஆக்ரோஷமாக துரத்திய நிலையில், நூலிழையில் காரில் இருந்தவர்கள் உயிர் தப்பினார் இந்தக் காட்சி அப்பகுதியில் நின்றிருந்த வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது
நமது செய்தியாளர் வடிவேல்