Followers

மூணாறு செல்லும் சாலையில் உடுமலை அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானையை தொந்தரவு செய்து புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள் -

 மூணாறு செல்லும் சாலையில் உடுமலை அருகே சாலை ஓரத்தில் நின்றிருந்த காட்டு யானையை தொந்தரவு செய்து புகைப்படம் எடுத்த வாகன ஓட்டிகள் - 


   




திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் அமராவதி வனச்சரக பகுதியான சின்னாறு பகுதியில் யானை, புலி, மான்,  சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன..



தற்பொழுது கோடை காலம் தொடங்கியதால் விலங்குகள் தண்ணீர் அருந்துவதற்காக அமராவதி அணைப்பகுதிக்கு வந்து செல்கின்றன..



இந்நிலையில் மூணாறு செல்லும் சாலை வனப்பகுதியில் வருவதால் அணைக்கு வரும் வனவிலங்குகள் சாலையை கடந்து செல்லும் பொழுது சில நேரங்களில் வனவிலங்கு மனித மோதல்கள் ஏற்படுவது வழக்கம்..



இதேபோல இன்று மூணாறு சாலைப் பகுதியில் தண்ணீர் குடிக்க வந்த ஒற்றை யானை சாலை ஓரத்தில் நின்றிருந்தது இதை கண்ட சுற்றுலா பயணிகள் யானையை பார்த்தபடி நின்றுள்ளனர்.



அப்போது அவ்வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் இருவர் யானைக்கு மிக அருகில் சென்று புகைப்படங்கள் எடுத்துள்ளனர்..



இதை பின்னால் வந்த சுற்றுலா பயணியர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.



சாலையில் ஓரத்தில் நின்றிருந்த யானை அருகே ஆபத்தை உணராமல் சென்று புகைப்படம் எடுத்த நபரை கண்டுபிடித்து அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.


நமது செய்தியாளர் சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post