Followers

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்..

 பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் கணக்கெடுப்பு துவக்கம்..










ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, உலாந்தி, மானாம்பள்ளி மற்றும் உடுமலை அமராவதி என 6 வனச்சரங்கள் உள்ளன.


இந்தப் வனபகுதிகளில் உள்ள 32 பீட் பகுதிகளில் ஒரு பீட் பகுதிக்கு

ஒரு வணவர், வனக்காப்பாளர், மற்றும் இரண்டு வேட்டை தடுப்பு காவலர்கள் என நான்கு பேர் வீதம் மொத்தம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 128 வனத்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த கணக்கெடுப்பு பணியானது இன்று தொடங்கி நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு நடைபெறும் எனவும் பின்பு மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் இந்த கணக்கெடுப்பு பணியினை ஒப்படைக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்..


மேலும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் இந்த யானைகள் கணக்கெடுப்பில் வனத்துறையினருடன் இணைந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர் 

நமது செய்தியாளர் சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post