வீட்டுக்குள் நுழைந்த சிறுத்தை பொதுமக்களை கண்டதும் சீறியது
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சேமுண்டி கிராம பகுதியைச்
சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள ஆட்கள் இல்லாத
வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இந்நிலையில் விருமன் என்பவர் வீட்டிற்குள் சிறுத்தை இருப்பதை உணர்ந்த வீட்டின் உரிமையாளர் சிறுத்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டார் உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை எவ்வாறு பிடிக்க வேண்டும் என வனத்துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு சிறுத்தைக்கு மயக்கி ஊசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது மேலும் சிறுத்தை பிடித்ததும் முதுமலை அல்லது சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட திட்டமிட்டு உள்ளனர் வனத்துறையினர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்