வால்பாறை அதிரப்பள்ளி செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டி சாலக்குடி வனத்துறையினர் அறிவுறுத்தல்
ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறை பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகின்றனர் தற்போது வால்பாறை பகுதியில் மழை அதிகமாக இருப்பதால் கேரள மாநிலத்தில் உள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுகிறது இதைக் காண வால்பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர் இந்நிலையில் நேற்று காலை அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று விட்டு சுற்றுலாப் பயணிகள் வால்பாறை நோக்கி வரும் வழியில் மலுக்குபாறை அருகே சாலையில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிவதை கண்டு அவரது செல்போனில் படம் பிடித்துள்ளனர் சிறுத்தையை கண்ட சுற்றுலா பயணிகள் மலக்குப்பாறை சோதனைச் சாவடியில் உள்ள வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதை அடுத்து சாலக்குடி செல்லும் வாகன ஓட்டிகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று அறிவுறுத்துள்ளனர்
நமது செய்தியாளர் வடிவேல்