கூடலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலாப்பழம் சீசன் தீவிரமடைந்துள்ள நிலையில் காட்டு யானை ஒன்று பலா மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறிக்க முயலும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கூடலூர் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானை கூட்டங்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலைப்பகுதி நோக்கி படையெடுக்கத் தொடங்கியது. மேலும்
தனியார் தேயிலை, காபி தோட்டங்களில் ஊடுபயிராக பயிரிடப்பட்டுள்ள பலாமரங்களில் அதிக அளவு பலாப்பழங்கள் விளைந்துள்ளன. இவற்றை சாப்பிடுவதற்காக சமவெளிப் பகுதியில் இருந்து காட்டு யானைக் கூட்டங்கள் பலாமரங்கள் நிறைந்த பகுதிகளில் முகாமிட்டுள்ளது. இன் நிலையில் நிலக்கோட்டை விளங்கூர் சாலையில் உள்ள பலா மரத்தின் மீது கால்களை வைத்து பலாப்பழத்தை பறிக்க முயன்றது இந்த காட்சியை அவ்வழியாக சென்ற பாதசாரி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது.
நமது செய்தியாளர் கரன்சி சிவகுமார்
Tags:
கூடலூர்