Followers

மூணார்:மறையூர் வனப்பகுதியில் நைலான் கயிறு காலில் சிக்கி காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு வயநாடு மருத்துவ குழு 5 நேரம் சிகிச்சை

 மறையூர் வனப்பகுதியில் நைலான் கயிறு காலில் சிக்கி காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானைக்கு வயநாடு மருத்துவ குழு 5 நேரம் சிகிச்சை


 




ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களுக்கு மத்தியில், கேரளா மாநிலம் சின்னாறு வனப்பகுதியில், மூணாறு ரோடு அமைந்துள்ளது.


இரு மாநில மக்கள், சுற்றுலா பயணியர் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த வழித்தடத்தில், யானைகள்

காலை, மாலை நேரங்களில் ரோட்டை கடந்து செல்கின்றன. இன் நிலையில்

கேரளா மாநிலம், மறையூர், காந்தலுார் வனப்பகுதியில், 21 வயது பெண் யானை, முன் இடது காலில் கயிறு சுற்றி  காயத்துடன் சுற்றி வந்ததை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறை பார்த்தனர்


உடனடியாக மேல் அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனப் பணியாளர் குழுக்கள் மற்றும் வயநாடு பகுதியிலிருந்து, 27 பேர் கொண்ட வன மீட்பு குழுவினர், நேற்று காலை, யானை இருந்த இடத்திற்கு வந்தனர். வனத்துறை டாக்டர் அனுராஜ், மோகன்தாஸ் கொண்ட குழுவினர், இரு முறை துப்பாக்கி வாயிலாக மயக்க ஊசி செலுத்தினர். ஒரு மணி நேரத்தில் யானை மயக்கமடைந்தது.





சுற்றிலும் கயிறுகள் கட்டி, பாதுகாப்பாக யானையின் முன் காலில் இருந்த காயத்திற்கு சிகிச்சை அளித்தனர். காலை, 7:00 மணிக்கு துவங்கிய சிகிச்சை, 11:00 மணிக்கு நிறைவடைந்தது. மயக்கம் தெளிந்தச யானை, வனத்திற்குள் வழக்கம் போல நடந்து சென்றது.


மருத்துவக் குழு குறுகையில்


யானை தன் வாழ்நாளில் பல்லாயிரக்கணக்கான மரங்களை உருவாக்குகின்றன. இவ்வளவு பரப்பளவு கொண்ட காடுகளை உருவாக்கியதில் இத்தனை நூற்றாண்டுகளில் யானைகளின் பங்கு அளப்பரியது. யானைகள் தனக்கு மட்டுமின்றி மற்ற வன விலங்குகளின் உணவு தேவையையும் பூர்த்தி செய்து, பல்லுயிர் வளத்துக்கு முக்கிய பங்காற்றுகிறது. யானைகள் இருக்கும் வனப்பகுதி வளமாக இருக்கும் எனவே சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எக்காரணத்தை கொண்டு வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகள் நைலான் கயிறுகள் பாட்டில்களை வீசுவதால், வன விலங்குகள் பாதிக்கின்றன. எனவே வன பகுதிக்குள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றனர்


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post