வால்பாறை- அதிரப்பள்ளி வனச்சாலையில் கபாலி காட்டு யானை உளாவதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் வனச்சாலையில் வாகனத்தை நிறுத்தக்கூடாது என்று சாலக்குடி வனத்துறை அறிவுறுத்தி வருகின்றனர்
வால்பாறை அருகே உள்ள சாலக்குடி, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வனசாலையில் அதிகமாக யானைகள் உள்ளன இன்நிலையில் பிரபலமான கபாலி என்கின்ற காட்டு யானை ஒரு வருடங்களுக்கு முன்பு அதிரப்பள்ளி செல்லும் இருசக்கர வாகனங்களை விரட்டுவதும் பேருந்துகளை வழிமறித்து நிற்பதும் தொடர்கதையாக இருந்தது இதனால் அதிரப்பள்ளி வனத்துறையினர் கபாலி யானை வன பகுதிக்கு விரட்டி அனுப்பினர் சில காலங்கள் வனப்பகுதியில் சுற்றி திரிந்த கபாலி தற்போது அதிரப்பள்ளி- மலுக்குப்பாறை தேசிய நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை கபாலி யானைksrtc பேருந்து மற்றும் ஆம்புலன்ஸ் வழி மறித்துள்ளது மாலை 5 மணி அளவில் 10 அடி பாலம் என்ற இடத்தில் சாலையை விட்டு நகராமல் 20 நிமிடம் வழியில் நின்றது இந்த காட்சி வைரலானதை அடுத்து சாலக்குடி வனத்துறையினர் மலுக்குப்பாறையில் இருந்து அதிரப்பள்ளி வரை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் கபாலி காட்டு யானை அதிரப்பள்ளி மலுக்குப்பாறை சாலை ஓரங்களில் நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் கவனத்துடன் இயக்க வேண்டும் வனச்சாலையில் வாகனத்தை நிறுத்தக்கூடாது மற்றும் வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து துன்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்
நமது செய்தியாளர் வடிவேல்