Followers

சாலக்குடி அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தையை அதிரடியாக மீட்கப்பட்டது

 சாலக்குடி அருகே கிணற்றில் விழுந்த சிறுத்தையை அதிரடியாக மீட்கப்பட்டது 




அதிரப்பள்ளி அருகே உள்ள  வாழைச்சாலை என்ற பகுதியில் வனப்பகுதி விட்டு வெளியேறு சிறுத்தை ஒன்று சிபு என்பவரின் விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. அங்கும் இங்குமாக உறுமிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்த சிறுத்தை கண்ட உரிமையாளர் சிபு திருச்சூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த சாலக்குடி  வனத்துறையினர் சிறுத்தை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கமாக மயக்க ஊசி செலுத்தி வளைக்கட்டி மீட்பது வழக்கம் ஆனால் இம்முறை மூங்கில் மரக்கம்புகளை ஏணி போல இறக்கி வைத்து காத்திருந்தனர். சிறிது நேரத்தில் அந்த மூங்கில் வழியாக சிறுத்தை  மேலேறி வனப்பகுதிக்குள் ஓடி மறைந்தது.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post