Followers

மூணார் அருகே பல சரக்கு கடையில் நுழைந்து காபித்தூளை எடுத்துச் சென்ற காட்டு யானை வைரலாகும் சிசிடிவி காட்சி

 மூணார் அருகே பல சரக்கு கடையில் நுழைந்து காபித்தூளை எடுத்துச் சென்ற காட்டு யானை வைரலாகும் சிசிடிவி காட்சி 


 



மூணாறு முற்றிலும் வனப்பகுதிகளால் சூழப்பட்ட ஒரு இடம் ஆகும்.இங்கு முக்கிய தொழில் தேயிலை விவசாயம். இதனால் மூணாறு எந்த காலநிலையில் பச்சை போர்வை போர்த்திய போல் காட்சி அளிக்கும் இடம் ஆகும்.இந்த தேயிலை விவசாயத்தை நம்பி இங்கு ஏராளமான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.


தொழிலாளர்களின் குடியிருப்புகள் நிலை கொள்வது வனத்தோடு சேர்ந்த பகுதிகளில் ஆகும்.மூணாறை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் காட்டு யானைகள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சுற்றி திரிவது வாடிக்கையான ஒன்றுதான் இந்நிலையில் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை கூட்டம் பல சரக்கு கடையில் நுழைந்த காட்டு யானை கூட்டம் முன் கதவை தள்ளி காப்பித்தூளை எடுத்துச் சென்றது இது அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது 


நமது செய்தியாளர் பிரபாகரன்

Post a Comment

Previous Post Next Post