Followers

அரசு பேருந்தை விரட்டியது நீண்ட கொம்பன் ஹாரன் சத்தம்.. கழட்டுறியா இல்லையா?

அரசு பேருந்தை விரட்டியது நீண்ட கொம்பன் ஹாரன் சத்தம்.. கழட்டுறியா இல்லையா?





கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர்  யலந்தூர் தாலுகாவில்  அமைந்துள்ளது  பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த மலை கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். பிலிகிரிரங்கன் மலை  என்பது தென்மேற்கு கர்நாடகாவையும் தென்னிந்தியாவில் தமிழ்நாடு (ஈரோடு மாவட்டம்) எல்லையும் இணைக்கும்  ஒரு மலைத்தொடராகும். இப்பகுதி பிலிகிரி ரங்கநாத சுவாமி கோயில் வனவிலங்கு சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு யானை சிறுத்தை புலி கரடி ஆகிய வனவிலங்கு வாழ்கின்றன இந்நிலையில் சாம்ராஜ்நகரில் இருந்து கர்நாடகா அரசு பேருந்து ஒன்று பிலிகிரி ரங்கநாத சுவாமி கோவிலுக்கு சென்றது அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய நீண்ட கொம்பன் என்ற காட்டு யானை சாலையை கடக்கும் பொழுது சற்றும் எதிர்பார்க்காமல் வந்த கர்நாடகா அரசு பேருந்து ஆரணை ஒலித்தது இதனால் கோபம் கொண்ட காட்டு யானை பேருந்தை விரட்டியது இந்த காட்சி அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுற்றுலா பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்கள் பதிவிட்டுள்ளார் இதைப்பற்றி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது அப்பகுதிக்கு விரைந்து வந்த சாம்ராஜ் நகர் வனத்துறையினர் நீண்ட கொம்பன் யானையை வனப்பகுதிக்கு விரட்டினர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 


நமது செய்தியாளர் சாம்ராஜ் நகரிலிருந்து

சூரிய நாராயணன்

Post a Comment

Previous Post Next Post