Followers

கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வைரலாகும் வீடியோ

 கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை வைரலாகும் வீடியோ




கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள்  நுழைவது வழக்கம். வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து யானைகள் வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு வருகிறது.

இந்நிலையில்கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள அன்னதான பொருட்கள் வைக்கும் அறைக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை - சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக அறைக்குள் இருந்த யானையை வாழைப்பழங்களை போட்டு வெளியில் வரவழைத்த வனத்துறையினர்..


நமது செய்தியாளர் நேசராஜ்

Post a Comment

Previous Post Next Post