நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள தேவர்சோலைப் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது......
கூடலூர் அடுத்துள்ள தேவர் சோலை தேவர் எஸ்டேட் 2 பகுதியில் கடந்த மூன்று நாட்களாக சுற்றி திரியும் சிறுத்தை பிடிக்க வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் நான்கு பேர் வீதம் ஐந்து குழுக்களாக பிரிந்து 20 பேர் கடந்த மூன்று நாட்களாக சிறுத்தையை தேடி வந்தனர் இரண்டு இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டு கேமராக்கள் பொருத்தப்பட்டன இரண்டு நாட்களாக தென்படாத சிறுத்தை இன்று கூண்டில் சிக்கியது சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டுள்ளதா வயறும் முதிர்வு காரணமா என்ற கோணங்களில் வனக்கால்நடை மருத்துவர் ராஜேஷ்
உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் சிறுத்தையின் உடல் பரிசோதித்த பின்பு முதுமலை வனப்பகுதியில் சிறுத்தை விடுவிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இது கூடலூர் பகுதியில் வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தையை வீட்டு ஊசி செலுத்திபிடித்த வனத்துறையினர் அந்த சிறுத்தை முதுமலை வனப்பகுதியில் விடுவித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்