தாயை விட்டு மற்றொரு யானை கூட்டத்துடன் சென்ற குட்டி யானையை மீண்டும் தாய் யானை ஏற்க மறுத்ததால் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து யானை பாகன்கள் வரவழைக்கப்பட்டு குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்
கோவை மருதமலை பகுதியில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை ஒன்று மருதமலை அடிவாரம் பகுதியில் உடல் நலம் பாதிப்பக்கப்பட்டு இருந்தது பின்னர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து அந்த பெண் காட்டு யானை குணமாகிய நிலையில் வனத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டது
இந்நிலையில் தாய் யானையுடன் இருந்த குட்டி யானை கடந்த 1-6-2024 அதிகாலை சுமார் 5:30அளவில் மற்றொரு தாய் யானையுடன் வனப்பகுதியில் சென்றது இதனைத்தொடர்ந்து
நேற்று காலை பச்சான் வயல் என்ற இடத்தில் அந்த யானை குட்டி நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை யடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற வனத்துறையினர் குட்டி யானை மீட்டு
யானை மடுவு என்ற இடத்தில் நின்றிருந்த தாய் யானையுடன் குட்டி யானையை சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர் இந்நிலையில் வேறொரு கூட்டத்தில் சென்ற குட்டியானையை தாய் யானை சேர்க்க மறுத்ததால் மீண்டும் வனத்துறையினரை நோக்கி அந்த குட்டி யானை வந்துள்ளது இதனால் அடுத்த கட்ட முயற்சியாக ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து மூன்று பாகன்களான கண்ணன், குமார், அரவிந்த் ஆகியவர்களை வரவழைத்து குட்டி யானையை தாயானையிடம் சேர்க்க அதற்கான பணியில் ஈடுபட உள்ளனர்
இப்பணியில் வன சரகர் அருண் மற்றும் திருமுருகன், கால்நடை மருத்துவர் சுகுமாரன் ஆகியோர் தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நமது செய்தியாளர் நேசராஜ்