Followers

வால்பாறை அடுத்துள்ள கவர்க்கில் ஊமை ஆண்டிமுடக் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானையை வனப் பகுதிக்கு அனுப்பும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகின்றனர்

 வால்பாறை அடுத்துள்ள கவர்க்கில் ஊமை ஆண்டிமுடக் பகுதியில் சுற்றித் திரியும் காட்டு யானையை வனப் பகுதிக்கு அனுப்பும் பணியில் வனத்துறை ஈடுபட்டு வருகின்றனர்




ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை மானாம்பள்ளி  வனச்சரகம் பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தை,கரடி, செந்நாய்கள் மற்றும் பறவை இனங்கள் அதிக அளவில் உள்ளன.


வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலுக்கு இடையே தற்போது சாரல் மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் வில்லோனி பகுதிகளில் இருந்த காட்டு யானை பொள்ளாச்சி வால்பாறை சாலை பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றிதிறிந்து வருகிறது.


மேலும், வனத்துறையினர் வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் இரவில் கவனமுடன் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளனர்.இந்நிலையில்வால்பாறை சாலை பகுதியில் ஒற்றைக் காட்டு யானை வால்பாறை அரசு பேருந்து  நோக்கி வரும் விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆனதையடுத்து வால்பாறை வனச்சரகர் வெங்கடேசன் உத்தரவின் பெயரில் கணேசன் பாரஸ்ட் தலைமையில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு காட்டு யானையை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து தொந்தரவு செய்வர் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்

நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post