பால் பாட்டலுடன் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
கோவை கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெண் காட்டு யானை மருதமலை அடிவாரத்தில் உடல் நலம் பாதிப்படைந்து இருந்தது பின்னர் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து பெண் காட்டு யானை குணமாகி அதன் பின்னர் வனத்துக்குள் அனுப்பி வைக்கப்பட்டது
அதன்பின்னர் தாயானையுடன் இருந்த குட்டி யானை 1-6-2024 அதிகாலை சுமார் 5:30அளவில் மற்றொரு தாய் யானையுடன் வனப்பகுதியில் சென்றது இன் நிலையில்
இன்று காலை பச்சான் வயல் என்ற இடத்தில் யானை குட்டி நிற்பதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் அந்த குட்டி யானை மீட்கப்பட்டு
யானை மாடுவு என்ற இடத்தில் அந்த தாயானையுடன் குட்டி யானை சேர்க்கும் பணியில் வன துறை ஈடுபட்டு வருகின்றனர்
இதில் வன சரகர் அருண் மற்றும் திருமுருகன் கால்நடை மருத்துவர் சுகுமாரன் ஆகியோர் தாய் யானையுடன் சேர்க்கும் பணியில் வன துறை ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது
நமது செய்தியாளர் நேசராஜ்