அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே ஓடையில் கம்பீரமாக நடந்து சென்ற புலி வைரலாகும் வீடியோ கேரளா வனத்துறை எச்சரிக்கை
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, அமராவதி, உடுமலை என 6 வனச் சரகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வனப்பகுதி ஒட்டியே கேரளா வனப்பகுதியும் அமைந்துள்ளது
இங்கு புலி, யானை, சிறுத்தை, வரையாடு, பல வகையான பறவைகள், மான்கள், அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே வாழச் சாலை வனப்பகுதியில் இரண்டு புலிகள் நடந்து சென்ற காட்சி அங்குள்ள மலைவாழ் மக்கள் ஒருவர் தனது செல்போன் வீடியோவாக பதிவு செய்துள்ளார் தற்போது இந்த வீடியோ வைரலானது இதை அடுத்து சாலக்குடி வனத்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர் மேலும் அப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர் வனத்துறை
நமது செய்தியாளர் வடிவேல்