Followers

கோவை மருதமலை வனத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை, 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பத்திரமாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. அதன் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்

கோவை மருதமலை வனத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை, 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பத்திரமாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.




 




கோவை : கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை அடிவார சரக பகுதியில் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு , களப் பணியாளர்களுடன் தணிக்கை செய்யப் பட்டது. அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் , குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு, உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டு கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர் அவர்களின் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள்  ஆகியோருடன் குழு அமைத்து பெண் யானைக்கு குளுக்கோஸ், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து,  உடல்நிலை தேறிய பெண் யானையை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தினர்.  பெண் யானையின் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கிடையே, குட்டி யானை தாய் யானையுடன் பால் குடித்தது

இந்நிலையில் மூன்று நாட்களாக உடன் இருந்த மூன்று மாதம் ஆன குட்டி ஆண் யானை மற்றும் மூன்று நாட்களாக சுற்று பகுதியில் இருந்து வந்த தாய் யானையின் மற்றுமொரு குட்டி  இளம் ஆண் யானையுடன் இன்று(01-06-2024) அதிகாலை சுமார் 05.30 மணி அளவில்  காட்டிற்குள் சென்றது. பின்னர் அதன் கூட்டத்துடன் இணைந்து நல்ல முறையில் இருப்பதை  ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்களாக அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து  வருகின்றனர். 4 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பெண் யானை உடல் தேறிய நிலையில் இன்று காலை பெண் யானையை பத்திரமாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது. அதன் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்


நமது செய்தியாளர் நேசராஜ்


Post a Comment

Previous Post Next Post