கோவை அருகே யானையை காப்பாற்ற போராடும் மருத்துவக்குழு தாயின் பாசத்திற்கு ஏங்கும் குட்டி யானை
கோவை : கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட மருதமலை அடிவார சரக பகுதியில் ரோந்து பணியின் போது, யானை பிளிரும் சத்தம் கேட்டு , களப் பணியாளர்களுடன் தணிக்கை செய்யப் பட்டது. அப்போது பெண் யானை ஒன்று குட்டியுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் பெண் யானை சற்று உடல்நிலை சரியில்லாமல் இருப்பதும் , குட்டி யானை அருகில் இருப்பதை கண்டு, உடனடியாக மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கபட்டு கள இயக்குநர் மற்றும் வனப் பாதுகாவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட வன அலுவலர் அவர்களின் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து பெண் யானைக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது
நேற்றைய முன்தின முழுவதும் குளுக்கோஸ், நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது நாளான நேற்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், உடல்நிலை தேறிய பெண் யானையை கிரேன் உதவியுடன் தூக்கி நிறுத்தினர். பெண் யானையின் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதற்கிடையே, குட்டி யானை தாய் யானையுடன் பால் குடித்தது அப்போது அங்கு நின்றிருந்த வனப் பணியாளர்கள் கண்ணில் தண்ணீர் சிந்த வைத்தது மேலும் நேற்றைய தினம் யானைக் கூட்டம் அந்த குட்டி யானையை அழைத்துச் சென்று விடும் என்று எண்ணிய நிலையில், அது நடைபெறாததால் நேற்றைய தினம் தினமும் 30 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்பட்டதோடு, எதிர்ப்பச் சத்து மருந்துகளும் வழங்கப்பட்டது
இந்நிலையில் மூன்று நாட்களாக உடன் இருந்த மூன்று மாதம் ஆன குட்டி ஆண் யானை மற்றும் மூன்று நாட்களாக சுற்று பகுதியில் இருந்து வந்த தாய் யானையின் மற்றுமொரு குட்டி இளம் ஆண் யானையுடன் இன்று(01-06-2024) அதிகாலை சுமார் 05.30 மணி அளவில் காட்டிற்குள் சென்றது. பின்னர் அதன் கூட்டத்துடன் இணைந்து நல்ல முறையில் இருப்பதை ட்ரோன் மூலமும், 25 களப் பணியாளர்களை நான்கு தனிக் குழுக்களாக அமைத்தும் அதன் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் வனத்துறையினர்
யானைக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் சுகுமார் குறுகையில்
சிகிச்சையின் முடிவில் அந்த தாய் யானை குட்டி யானையை அழைத்துக் கொண்டு வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு. ஆனால், தற்போது அந்த பெண் யானையின் தசைகள் அனைத்தும் தளர்ந்து காணப்படுவதால் அதனால் நடக்க முடியவில்லை.தொடர்ந்து யானைக்கு இளநீர், தர்பூசணி, லாக்டோஜன் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்
நமது செய்தியாளர் நேசராஜ்
Tags:
கோவை யானை