குட்டி ஈன்ற தாய் யானையை காவல் காக்கும் பாட்டி அக்கா,தங்கை, மகன்: வால்பாறையில் ஆச்சரியமூட்டும் சம்பவம்
தமிழக -- கேரள எல்லையில், வனவளம் நிறைந்த வால்பாறையில், ஆண்டுதோறும் பருவமழைக்கு பின், காட்டுயானைகள் அதிகளவில் முகாமிடுகின்றன. கேரள மாநிலம் மளுக்கப்பாறை, மயிலாடும்பாறை வழியாக வால்பாறைக்கு யானைகள் தனித்தனி கூட்டமாக வருகின்றன.
இந்த யானைகள் மழை காலம் முடியும் வரை வால்பாறையில் உள்ள பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் உள்ள துண்டு சோலைகளில் முகமிடுகின்றன . 2024 ஆண்டுக்கான யானைகள் வரவானது ஆகஸ்ட் 1 தேதி தொடங்கியது இதில் முதல் யானைகள் கூட்டமானது சேக்கல் முடி வழியாக வர துவங்கியது இந்த யானை கூட்டத்தில் ஒரு பெண் யானை கர்ப்பமாக இருப்பதை பார்த்த வனத்துறையினர் உடனடியாக மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது உடனடியாக யானைகளை கண்காணிக்க சிறப்பு குழுக்களை நியமித்து யானைகளை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டனர்.
இதில் மானாம்பள்ளி பாரஸ்ட் முத்து மாணிக்கம் வன காப்பாளர் விபின் ராஜ் மற்றும் விஜயமோகன், பிரதாப், ஜான் , கிறிஸ்டோபர், வினோத் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வந்த இந்நிலையில் இன்று காலை 6:00 மணி அளவில் தனியார் எஸ்டேட்டுக்கு சொந்தமான முடிஸ் தேயிலைத் தோட்ட பகுதி அருகே உள்ள ஓடையில் கூட்டியை ஈன்றெடுத்தது சில நொடிகளில் குட்டி யானைக்கு தாய்ப்பால் ஈட்டியது தாய் யானை
இந்த யானையின் அருகே பாட்டி யானையும் அருகே நின்று கொண்டு தாய்யும் குட்டியும் தனது பாதுகாப்பில் வைத்து வருகிறது.
அதன் சகோதரி யானையும், பின்பக்கத்தில் சில அடி தூரத்தில் நின்று காவல் காத்து வருகின்றன. இந்த கண்கொள்ளாக் காட்சியை அப்பகுதி மக்கள் பரவசத்துடன் பார்த்து ரசித்தனர் எனினும், யானைகள் இருக்கும் பகுதிக்கு அருகில் மக்கள் சென்றுவிடவேண்டாம் என்று வனத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதைப் பற்றி மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் தெரிவிக்கையில் :
அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் வால்பாறையில் யானைகள் இடம்பெயர்வது அதிகமாக இருக்கும். இதே சமயங்களில்தான், காட்டு யானைகள் குட்டி போடுவதும் சகஜம்.பெரும்பாலும் அடர்ந்த வனப் பகுதியில், தண்ணீரும், பசுமையான உணவும் கிடைக்கும் பகுதியில்தான் யானைகள் குட்டி ஈனும். இந்த யானையும் ஓடை பகுதியில் தான் குட்டியை ஈன்றெடுத்துள்ளது இங்கு தேவையான தண்ணீர் பசுமையான புல்லு இங்கு அதிகமாக உள்ளது மேலும், குட்டி ஈன்ற யானையை, அதற்கு நெருக்கமான உறவு முறையுள்ள யானைகள்தான் காவல் காக்கும்.
அந்த வகையில், இந்த யானைக்கு அருகில் நின்று கண்காணிக்கும் மற்றொரு பெண் யானை, இதன் சகோதரியாக அல்லது தாயாக இருக்கக்கூடும் மேலும் பொதுவாக தாய் யானை குட்டி ஈன்றால், அந்தக் குட்டியை விட்டு சிறிதுதூரம் கூட நகராது. குட்டி ஓரளவுக்கு நடந்து செல்லும் பக்குவத்துக்கு வந்த பின்னரே, குட்டியையும் அழைத்துக்கொண்டு, மற்றொரு இடத்துக்குச் செல்லும். அதற்கு 10 நாட்கள் முதல் 20 நாட்கள் ஆகலாம். எனவே தேயிலை தோட்ட பகுதி அருகே உள்ள சாலைகளில் யானை கடக்க கூடும் என்பதால் 24 மணி நேரமும் வனத்துறையினர் ரோந்து பணியில் இருப்பார்கள் மேலும் சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அதிகமாக ஒளி எழுப்பு கூடிய ஆரன்களை ஒலிப்பதை தவிர்க்க வேண்டும் என்றனர்
நமது செய்தியாளர் :வடிவேல்