Followers

கோவை நரசிம்மபுரம் அருகே காட்டி யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள வனத்துறை ஊழியர்கள்

 கோவை நரசிம்மபுரம் அருகே காட்டி யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள்  அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ள  வனத்துறை ஊழியர்கள் 




கோவை புறநகர் பகுதியையொட்டி மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான யானைகள், காட்டெருமைகள், புள்ளி மான்கள் சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது இதனால் வனவிலங்குகள் உணவு, குடிநீரை தேடி வனத்தையொட்டி உள்ள கிராம பகுதிகளுக்குள் படையெடுத்து வருகின்றன.



இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை கூட்டம் நரசிபுரம் பகுதியில் சுற்றித்திரிந்தது இதைப்பற்றி வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது யானை கூட்டமானது விவசாயிகளின் மண் சாலையில் யானை கூட்டம் கடந்து சென்றது இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது யானைகளை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள்  கண்காணித்து வருகின்றனர்


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post