கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன் பகுதியில் நாயை வேட்டையாட குடியிருப்புகள் உலா வந்த கருஞ்சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வைரல்
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் சமீப நாட்களாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வரும் சிறுத்தைகள் செல்லப் பிராணிகளான பூனை நாய் போன்றவற்றை வேட்டையாடி செல்கின்றன
இந்த நிலையில் மிளிதேன் பகுதியில் கருஞ்சிறுத்தை ஒன்று வீட்டிற்குள் கேட்டைத் தாண்டி உள்ளே நுழைந்து உலாவி பின்பு வெளியே செல்லும் சிசிடிவி காட்சிகளும் பதிவாகியுள்ளது இதைப் பற்றி உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் அப்பகுதி ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறை அறிவித்துள்ளனர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்