Followers

வால்பாறை-சாலக்குடி வனச்சாலையில் கம்பீர நடையில் ஏழாம் முகம் கணபதி

 வால்பாறை-சாலக்குடி  வனச்சாலையில் கம்பீர நடையில் ஏழாம் முகம் கணபதி 


அதிரப்பள்ளி மக்களால் அழைக்கப்படும் செல்ல பிள்ளையான ஏழாம் முகம் கணபதி புகைப்படம்

VIDEO BY :WILDLIFE VALPARAI YOUTUBE UPDATE

வால்பாறை :

வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் சாலக்குடி செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் இந்த சாலையில் அடிக்கடி காட்டு யானைகள், கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் காணப்படும். இதன் காரணமாக இந்த சாலையில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.




காலநிலை மாற்றம்:

தற்போது காலநிலை மாற்றத்தின் காரணமாக கேரளா  வனப்பகுதியில் இருந்து வால்பாறை வனப்பகுதிக்கு காட்டு யானைகள் இடம்பெயர்ந்து வருகின்றன. இவ்வாறு செல்லும் காட்டு யானைகள் சில நேரங்களில் சாலையோர பகுதிகளில் முகாமிடுவது வழக்கம். இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் அதிரப்பள்ளி மக்களால் அழைக்கப்படும் ஏழாம் முகம் கணபதி வனப்பகுதியில் இருந்து வால்பாறை சாலக்குடி சாலையில் கம்பீர நடை போட்டு தனது துதிக்கையால் அங்கும் இங்கும்  ஆட்டியபடி சாலையில் நடந்தது இந்த காட்சி அப்பகுதியில் நின்றிருந்த WILDLIFE போட்டோகிராபர் வீடியோவாக பதிவு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் இந்த காட்சியை யானை பிரியர்கள் கண்டு ரசித்து மற்றவர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் 



நமது செய்தியாளர் திருச்சூர் விபின்

Post a Comment

Previous Post Next Post