Followers

பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண் யானைகள் உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.,

 பொள்ளாச்சி அருகே மின்சாரம் தாக்கி 2 பெண் யானைகள் உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.,




பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, கரடி, யானை,உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.,


இந்த வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வருவது வழக்கம்.,




இந்நிலையில் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பருத்தியூர் பிரிவு பகுதியில் இரண்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்துள்ளது.,


இந்த யானைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியை விட்டு சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனியார் தோட்டத்திற்குள் புகுந்து உலா வந்துள்ளது அப்போது அந்த தோட்டத்தில் தாழ்வான பகுதியில் இருந்த மின் கம்பியில் யானைகள் உராசியினால் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளது.,




அந்தப் பகுதியில் வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் இரண்டு யானைகள் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர்.,


இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்க்கவ தேஜா மற்றும் வன சரகர்கள் சுந்தர வடிவேல் மற்றும் ஞானபால சுப்பிரமணியம் யானைகள் உயிரிழந்த இடத்தை ஆய்வு மேற்கொண்டு ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரும் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலருமான ராமசுப்பிரமணியம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டனர்.,


இதை அடுத்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் உத்தரவின் பேரில் உயிரிழந்த யானைகளின் உடல் பிரேத பரிசோதனை நடைபெறும் எனவும் இதில் உயிரிழந்த யானைகளின் வயது மற்றும் மற்ற விபரங்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் எனவும் தெரிவித்துள்ளனர்.,


தண்ணீர் மற்றும் உணவை தேடி வன பகுதியை விட்டு வெளியேறிய இரண்டு பெண் யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் மற்றும் வனத்துறையினர் இடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.,


நமது செய்தியாளர் பொள்ளாச்சி சக்திவேல்

Post a Comment

Previous Post Next Post