கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 5 மாத புலிக்குட்டி உயிரிழந்தது வனத்துறை விசாரனை
கோத்தகிரி - மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில், மாமரம் என்ற பகுதிக்கு அருகில், தார் சாலையின் நடுவே, புலிக்குட்டியின் உடல் அடையாளம் தெரியாத வாகன மோதி இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது அப்பகுதிக்கு விரைந்து வந்த கோத்தகிரி வனத்துறையினர் புலியின் இறப்பை உறுதி செய்துள்ளனர்.
தங்க நகைகளை இன்றைய மார்க்கெட் விலைக்கு விற்று உடனடி பணம் பெற (VJ GOLD COMPANY )தொடர்பு கொள்ளவும்புலிக்குட்டி சாலையை கடக்கும் போது வாகனம் மோதி உயிர் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறை தெரிவித்துள்ளனர் புலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய வாகனத்தைக் கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்துத் தெரிவித்த வனத்துறையினர், "நேற்றிரவு சுமார் 10.00 மணியளவில் சாலையைக் கடக்க முயன்ற புலிக் குட்டி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அதன் விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்திருக்கிறது. குறிப்பிட்ட நேரத்தில் இந்த பகுதியில் சென்ற வாகனங்கள் குறித்து சோதனைச்சாவடிகள் மற்றும் சி.சி.டி.வி கேமராக்கள் மூலம் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். வனத்துறையினர்
நமது செய்தியாளர் கரன்சி சிவக்குமார்