வால்பாறையில் குடியிருப்பு பகுதியில் யானைகள் நுழையா வண்ணம் அதிரடி காட்டும் வனத்துறையினர். 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனஊழியர்கள்
வால்பாறை:
வால்பாறை பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் வறட்சி தொடங்கியது. இதனால் வால்பாறை வனப்பகுதியில் இருந்த காட்டு யானைகள் கேரள வனப்பகுதிக்கு சென்று விட்டன. தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வால்பாறை பகுதி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதைதொடர்ந்து கேரள வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் மீண்டும் வால்பாறை வனப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து வர தொடங்கி உள்ளது.
2024 ஆண்டுக்கான யானைகள் வரவானது ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது :
தமிழக-கேரள எல்லையில் உள்ள வால்பாறை வனப்பகுதி, சாலக்குடி வனப்பகுதியில் காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இவை காலசூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் ஆகிய காரணங்களுக்காக இடம்பெயர்ந்து செல்வது வழக்கம். அந்த வகையில் வால்பாறை வனப்பகுதிக்கும், கேரள வனப்பகுதிக்கும் யானைகள் சென்று வருகின்றன. இந்நிலையில் 2024 ஆண்டுக்கான யானைகள் வரவானது ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கியது இதில் பல்வேறு யானைகள் துண்டு சோலைகளில் முகாமிட்டு வருகின்றது இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழையா வண்ணம் மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் அவர்களின் உத்தரவின் பேரில் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டு யானைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை கூட்டம் முடிஸ் குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முற்பட்டது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்த முத்து மாணிக்கம் பாரஸ்ட் தலைமையில் வனக்காப்பாளர் விபின் ராஜ் மற்றும் விஜய் மோகன் ,பிரதாப் ,ஜான் பால் ,செல்வகுமார், ஐயப்பன் ,வினோத் வனக்குழுவானது அதிரடியாக ஈடுபட்டு யானை கூட்டத்தை வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை எஸ்டேட் பகுதியில், தனித்தனியாக முகாமிட்டுள்ள யானைகள் குறித்த தகவல்களை, NCF குறுஞ்செய்தி வாயிலாக தொழிலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். இது தவிர யானைகள் நடமாடும் எஸ்டேட் பகுதியில், சிகப்பு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.யானைகளின் இருப்பிடம், முன்கூட்டியே பொதுமக்களுக்கு மாலை வேளைகளில் கேபிள் டிவி மூலம் ஒளி பரப்பப்படுகிறது இதனால், சமீப காலமாக யானைகள் - மனித மோதல் வெகுவாக குறைந்துள்ளது.
தங்க நகைகளை இன்றைய மார்க்கெட் விலைக்கு விற்று உடனடி பணம் பெற (VJ GOLD COMPANY )தொடர்பு கொள்ளவும்
தற்போது, யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணியர், யானைகள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். யானைகள் நடமாடும் பகுதியில் தொழிலாளர்களை தேயிலை பறிக்க எஸ்டேட் நிர்வாகங்கள் அனுமதிக்கூடாது. யானைகள் நடமாடும் பகுதியில் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வெளியில் நடந்து செல்வதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.
நமது செய்தியாளர் வால்பாறை வடிவேல்