Followers

சிங்கவால் குரங்குகள் வால்பாறை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக விதை பந்துகள் தூவல்

 சிங்கவால் குரங்குகள் வால்பாறை குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை தடுக்கும் முயற்சியாக விதை பந்துகள் தூவல் 





மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த மழைக் காடுகளை, தவிர உலகின் வேறு எங்குமே சிங்கவால் குரங்குகளைக் காண முடியாது. சிங்கவால் குரங்குகள் மட்டுமல்ல இது போன்று பல ஓரிட வாழ்விகளைக் கொண்ட பொக்கிஷம், மேற்குத் தொடர்ச்சி மலைகள்.

சிங்கவால் குரங்குகள் அடர்ந்த பசுமை மாறாக் காடுகள் மற்றும் மழைக்காடுகளைத் தங்களின் வாழிடமாகத் தேர்ந்தெடுத்ததற்கு முதன்மையான காரணம், அதன் உணவுப் பழக்கமே. சிங்கவால் குரங்குகளின் முதன்மையான உணவு பழங்கள். அடர்ந்த பசுமை மாறாக் காடுகளில் வருடம் முழுவதும் ஏதாவது ஒரு மரம் காய்த்துப் பழுத்துக்கொண்டே இருக்கும். அது உணவு தடையின்றி கிடைப்பதற்கு வாய்ப்பாய் அமையும்சிங்கவால் குரங்குகளின் உணவு உண்ணும் பழக்கத்தால் ஓர் இடத்தில் உள்ள மரத்தின் விதைகளை காடு முழுவதும் பரப்புவதற்கு முக்கிய காரணமாகிறது. பழங்களில் முக்கியமாக  பலாப்பழம் மற்றும் வெடிப்பலா பழம் சிங்கவால் குரங்குகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு தற்போது காடுகள்  அழிப்பதாலும் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களிடம் உள்ள தின்பண்டங்களை அவற்றுக்கு அளிக்க தொடங்கினர். தின்பண்டங்களின் சுவைக்கு பழகிய சிங்கவால் குரங்குகள் நாளடைவில் குடியிருப்பு பகுதிகள் நடமாடத் தொடங்கி மனிதர்களுடன் பழகிவிட்டன. இதனை தடுக்கும் முயற்சியாக



தேசிய மாணவர் படையின் சமூக சேவை மற்றும் சமுதாய மேம்பாட்டு செயல்பாட்டின் ஒரு பகுதியாக கோவை குரூப், 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி, தமிழ்நாடு வனத்துறை (வால்பாறை வனசரகம்) உதவியுடன் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கு 15க்கு (Life on land) பங்களிக்கும் விதமாகவும் உலக சாதனையை பதிவு செய்யும் நோக்கத்துடனும் இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் வாழும் அழிந்து வரும் நிலையில் உள்ள சிங்கவால் குரங்குகளை மீட்டெடுக்கும் விதமாகவும் வால்பாறை வனப்பகுதியில் அக்டோபர் 22ஆம் தேதி விதை பந்துகள் தூவப்பட்டது.


சிங்கவால் குரங்குகள் விரும்பி உண்ணும் பழங்களுடைய சுமார் 775 விதைகளை, சிங்கவால் குரங்குகள் வாழும் காடுகளில் இருந்து என்சிசி மாணவர்கள், என்சிசி அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சேகரித்தனர்.

சேகரிக்கப்பட்ட விதைகளை கொண்டு என்சிசி மாணவ மாணவியர் விதைப்பந்துகளை உருவாக்கினர். வால்பாறை வனப்பகுதியில் சிங்கவால் குரங்குகள் காணப்படும் பகுதியான அய்யர்பாடி எஸ்டேட் வனப்பகுதியில் என்சிசி மாணவர்களால் மற்றும் வனத்துறை அதிகாரிகள் விதைப்பந்துகள் தூவப்பட்டது.



இந்த நிகழ்வு தேசிய மாணவர் படையின் கோவை குரூப் கமாண்டர் கர்னல் BVS சிவா ராவ் வழிகாட்டுதலில், 2 தமிழ்நாடு விமானப்படை என்சிசி கமெண்டிங் அதிகாரி விங் கமாண்டர் பர்குணன் தலைமையில் நடைபெற்றது. 2 தமிழ்நாடு விமானப்படை என் சி சி ஐ சார்ந்த அதிகாரிகள் சதீஷ்,விகாஸ், ரவி, விஷாந்த், கல்லூரி என்சிசி அதிகாரிகள் லாவண்யா, ரோகிணி, சூர்ய உமாதேவி, ஜகன்நாதன், மற்றும் தமிழ்நாடு வனத்துறை வால்பாறை வனக்கோட்டத்தை சார்ந்த வனசரகர்கள் திரு.வெங்கடேஷ் மற்றும் திரு. கிரிதரன் ஆகியோர் உடன் இருந்து இந்நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.


நமது செய்தியாளர் வடிவேல்

Post a Comment

Previous Post Next Post