Followers

ஆழியார் அருகே வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய மூன்று பேர் கைது

ஆழியார் அருகே வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய மூன்று பேர் கைது 



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வன சரகத்திற்கு உட்பட்ட ஆனைமலை அருகே உள்ள கடுக்காய் 


மரத்திட்டு பகுதியில் பொள்ளாச்சி வன சரகர் உள்ளிட்ட களப்பணியாளர்கள் கள ஆய்வுப் பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அடர்ந்த வனப்குதிக்குளீ மூன்று மர்ம நபர்கள் சுற்றித்திரிந்ததைக் கண்டு அவர்களை நோக்கி சென்ற போது அங்கிருந்த வனத்துறையினரை கண்டித்தும் மூன்று பேர் தப்ப முயன்றனர். அப்போது களப்பணியாளர்கள் அந்த மூன்று பேரை பிடித்ததோடு அவர்கள் கையில் வைத்திருந்த கவரை சோதனை செய்த போது அதில் மூன்று சந்தன மரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டதில் கள்ளக்குறிச்சி பகுதி சேர்ந்த அண்ணாமலை, அசோக், கணேசன் என்பது தெரிய வந்தது. இவர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று சந்தன மரங்களை வெட்டி கடத்தப்படுவதும் தெரிய வந்தது. பின்னர் அவர்களிடம் இருந்த மூன்று சந்தன மரங்களை பறிமுதல் செய்ததோடு மூன்று பேரும் மீதும் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதியம் 2 மணி அளவில்  பொள்ளாச்சி கிளை சிறையில் அடைத்தனர்.

நமது செய்தியாளர்: மாசிலாமணி

Post a Comment

Previous Post Next Post