மாரண்டஅள்ளி அருகே பூனையை விரட்டிய சிறுத்தைபுலி விவசாய கிணற்றில் விழுந்தது.
நீண்ட நேரம் போராடி மீட்ட தீயணைப்பு துறையினர்
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியை அடுத்த சங்கராபுரம் வன் பகுதியிலிருந்து இரை தேடி ஊருக்குள் நூலைந்த சிறுத்தைப்புலி வீட்டுப்பூனையை விரட்டி சென்றபோது அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து கிராம மக்கள் அளித்த தகவலின்படி விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தைபுலியை மேலே கொண்டு சென்றனர்.
அப்போது வலையிலிருந்து தாவி குதித்து தென்னந்தோப்பிற்குள் ஓடி சென்றது
தகவலறிந்து வந்த 10க்கும் மேற்பட்ட பாலக்கோடு வனத்துறையினர் சிறுத்தைபுலியை கூண்டு வைத்து பிடிக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்
நமது செய்தியாளர் தர்மபுரி சுகுமார்