வீடியோவை முழுமையாக பார்க்கும் பொழுது யானை இப்படியும் தூங்கும். என்பது பலருக்கும் தெரிவதில்லை
கேரளா மாநில வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. அவைகள் தொந்தரவின்றி வாழ்வதற்கு ஏதுவான சூழலை கேரள வனத்துறை செய்துள்ளது. இந்நிலையில் அதிரப்பள்ளி அருகே உள்ள வெற்றிலை பாறை எண்ணெய் பண்ணை தோட்ட பகுதியில் உலா வந்த காட்டு யானை கூட்டம் அங்கு வைக்கப்பட்டிருந்த பனை மரத்தை சாப்பிட்டதில் பெண் யானை ஒன்று தூக்கத்தை தவிர்க்க முடியாமல் வேட்டிலைப் பாறை சாலையில் உடலை நெளிந்தவாறு சாலையில் படுத்து உறங்கிய காட்சி அவ்வழியில் சென்ற வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்த காட்சி வைரலாகியுள்ளது.
இதைப் பற்றி வால்பாறை வன அலுவலர் வடிவேல் தெரிவிக்கையில் :
உலகிலேயே மிகக் குறைந்த நேரம் உறங்கும் பாலூட்டி யானை தான் யானை சராசரியாக 6 மணி நேரம் வரை தூங்கும் என்று சொல்வார்கள். ஆனால், காட்டு யானைகள் இவ்வளவு குறைந்த நேரம்தான் தூங்குகிறது என்பது ஆச்சரியமான விஷயம்.
யானைகளின் குறைந்த நேரத்தூக்கத்திற்குக் காரணம், அந்த உடல் பெரிது என்பதும், நிறைய உணவுகளைத் தேடி சாப்பிட வேண்டும் என்பதால், நிறைய நடந்து, குறைவாகத் தூங்குவதாகச் சொல்லியிருக்கிறார்கள். மேலும், சில இடங்களில் தனக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்தால் அந்தப் பகுதிகளில் நிற்காமல் கடக்கின்றன யானைகள். எனவே தூக்கத்தை தவிர்க்க முடியாமல் சாலையில் மட்டுமல்ல வனப்பகுதியிலும் காலை நீட்டிக் கொண்டு உறங்குவது சகஜமான ஒன்றுதான்
நமது செய்தியாளர் விபின்