கூடலூர் அருகே உள்ள செலுக்காடி வனப்பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி புலி உயிரிழப்பு வனத்துறையினர் விசாரணை.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள மூன்றில் அழகான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ளன அதனால் அங்கு விலங்குகளை நடமாட்டமும் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக சிறுத்தை ,புலி ,உள்ளிட்ட ஊன் உண்ணிகள் உணவு தேடி ஊர் பகுதிகளுக்கும் அவ்வப்போது உலா வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன இந்த நிலையில்( செலுக்காடி )
கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் புலி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் இதையடுத்து கூடலூர் DFO, மற்றும் ACF தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
சுருக்கு கம்பியில் மாட்டிய புலி வனத்துறை விசாரணை :
அப்போது சுருக்கு கம்பியில் சிக்கி புலி இறந்திருப்பதை உறுதி செய்துள்ளனர் மேலும் கால்நடை மருத்துவர் புலியின் உடலை பிரேத பரிசோதனை செய்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர் தொடர்ந்து வனப்பகுதி மற்றும் தனியார் தோட்ட எல்லைப் பகுதியில் புலி இறந்திருப்பதால் புலி இறந்து கிடந்த வனத்தை ஒட்டிய
தோட்டத்தின் உரிமையாளர் யார் ? எனவும் மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நமது செய்தியாளர்: கரன்சி சிவகுமார்