காப்பி தோட்டத்தில் வேலை செய்த வட மாநில தொழிலாளர்களை காட்டு யானை விரட்டியதால் சில்வர் ஓக் மரத்தில் ஏறி தப்பினர்
கூடலூர் சில்வர் கிளவுட் பகுதியில் தனியார் தேயிலை மற்றும் காபி எஸ்டேட் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலையில் எஸ்டேட் பகுதியில் உள்ள ஏழுமுறம் காப்பி தோட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது காட்டு யானை ஒன்று அவர்களை விரட்டியது. இதில் பலர் ஓடு... ஓடு... என கூறியவாறு தப்பி ஓடினர். சிலர் அந்தப் பகுதியில் உள்ள சில்வர் ஓக் மரங்களில் ஏறினர். இதைக் கண்ட காட்டு யானை மரத்தின் அடியில் வந்து நின்றபடி தொழிலாளர்களை பார்த்துக் கொண்டிருந்தது. சிறிது நேரம் மெதுவாக வனப் போவதுக்கு சென்று மறைந்தது இந்த காட்சி மரத்தில் தொங்கிய வடமாநில தொழிலாளர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் தற்பொழுது வைரலாகி வருகிறது
இதைப் பற்றி வனத்துறை தெரிவிக்கையில்
கூடலூர் சில்வர் கிளவுட் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் குடியிருப்புகளின் அருகே யானைகளின் நடமாட்டம் காணப்பட்டால் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது .
யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் தொழிலாளர்கள் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்
நமது செய்தியாளர் :கரன்சி சிவகுமார்