Followers

வால்பாறை அருகே உள்ள கேரளா மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில் ஹாரன் ஒழித்ததால் சுற்றுலா பயணி வாகனத்தை துரத்திச் சென்று தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.,

 வால்பாறை அருகே உள்ள கேரளா மாநிலம் அதிரப்பள்ளி பகுதியில்  ஹாரன் ஒழித்ததால் சுற்றுலா பயணி வாகனத்தை துரத்திச் சென்று தாக்கிய காட்டு யானையால் பரபரப்பு - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்.,




பொள்ளாச்சி.,டிசம்பர்.,05


கோவை மாவட்டம் வால்பாறை அருகே தமிழக எல்லை பகுதியில் அமைந்துள்ள கேரளா மாநிலம் அதிரப்பள்ளி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.,


இந்நிலையில் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் வழி அடர்ந்த வனப்பகுதியில் நடுவே அமைந்துள்ளது இப்பகுதியில் கரடி, புலி, சிறுத்தை குறிப்பாக காட்டு யானைகள் அதிகமாக வசிக்கும் இடமாக உள்ளது.,


சோலையார்அணை பகுதியிலிருந்து அதிரப்பள்ளிக்கு செல்லும் சுற்றுலாபயணிகள் வனப்பகுதிகளின் ஓரங்களிலும், சாலைகளிலும் நிற்கும் காட்டுயானைகளை தொந்தரவு செய்யவேண்டாம். கவனமாக செல்லவேண்டும். காட்டுயானைகள் சாலையில் நிற்பதை பார்த்தால் அவைகளை கூச்சலிட்டோ, ஹாரன் ஒலி எழுப்பியோ தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து வாகனத்தை சற்று பின்னோக்கி எடுத்து சிறிது நேரம் காத்து நின்றால் யானைகள் வனப்பகுதிக்குள் சென்று விடும். இந்த வழியாக செல்லக் கூடிய சுற்றுலாபயணிகள், வாகன ஓட்டிகள் குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்களில் வரும் சுற்றுலாபயணிகள் யானைகளை தொந்தரவு செய்வதை கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழியாக மாலை 5 மணிக்கு மேல் வாகனங்கள் அனுமதிப்பதில்லை. எனவே இரண்டு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தங்களது பயணத்தை மாலை 3 மணிக்குள் மளுக்கப்பாறை வனத்துறை சோதனையை கடந்து சென்றால் பாதுகாப்பாக இருக்கும். மாலை 5 மணிக்கு கடந்து செல்லும் போது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்குள் இருட்டிவிடும். இதனால் பாதுகாப்பற்ற நிலைஏற்படும். எனவே இரண்டு சக்கர வாகனங்களில் வருபவர்கள் இவற்றை கருத்தில் கொண்டு தங்களது பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.



இந்நிலையில் நேற்று மாலை வால்பாறைக்குச் சென்ற சுற்றுலா பயணிகள் வால்பாறையை சுற்றி பார்த்துவிட்டு அதிரப்பள்ளி வழியாக கேரளா மாநிலம் சென்றுள்ளனர்.,


அப்போது மழுக்குபாறை என்னும் இடத்தில் ஒரு காட்டு யானை சாலையில் உலா வந்துள்ளது இதை கண்ட சுற்றுலா  பயணிகள் ஒலி எழுப்பியதால் கோபம் கொண்ட காட்டு யானை வாகனத்தை விரட்டியது சுதாரித்துக் கொண்ட வாகன ஓட்டி பின்னோக்கி நகர்ந்துள்ளனர் அப்போது ஆக்ரோசமடைந்து யானை வாகனத்தை தாக்கியுள்ளது இதில் வாகனத்தின் முன்பகுதி சேதம் அடைந்த நிலையில் வாகனத்தில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதால் காட்டு யானை அங்கிருந்து நகர்ந்து சென்றது இந்த காட்சி மறுமுனைகள் நின்ற வாகன ஓட்டி வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதனைகள் பதிவிட்டுள்ளார் தற்போது வைரலாகி வருகிறது 


கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மழுக்கு பாறை பகுதியில் சாலையின் நடுவே ஒரு யானை படுத்து உறங்கிய காட்சி வலைதளங்களில் பரவி வந்த நிலையில் தற்போது சாலையில் சென்ற சுற்றுலா பயணியின் வாகனத்தையும் தாக்கி சேதப்படுத்தி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்


வால்பாறை பகுதியில் இருந்து சாலக்குடி சாலையில் பயணம் செல்லும் சுற்றுலா பயணிகள் சாலையில் நின்று  புகைப்படங்கள் எடுக்கக் கூடாது எனவும் வாகனங்களையும் வழியில் நிறுத்தக்கூடாது எனவும் சோதனைச் சாவடியில் அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர்.,


நமது செய்தியாளர்: ந. வடிவேல் 

Post a Comment

Previous Post Next Post