பொள்ளாச்சி அருகே உள்ள டாப்ஸ்லிப் பகுதியில் கேரளா மாநில அரசு பேருந்தில் பயணி ஒருவர் வீடியோ எடுக்க முயன்றவரை காட்டு மாடு தாக்க முயன்றது - இதனால் பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ளது டாப்ஸ்லிப் மற்றும் பரப்பிக் குளம் பகுதி.,
இந்த டாப்ஸ்லிப் பகுதியில் கரடி, புலி, சிறுத்தை காட்டு யானைகள் மற்றும் காட்டுமாடுகள் அதிகமாக வசிக்கும் இடமாக உள்ளது.,
மேலும் இந்த டாப்ஸ்லிப் பகுதியை சுற்றி பார்க்க உள் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் வழி மாநிலத்தினரும் அதிக அளவில் வருவது வழக்கம்.,
அப்போது வனப்பகுதி சாலை ஓரங்களில் நின்றிருக்கும் காட்டு மாடு, யானை உள்ளிட்ட வன விலங்குகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள்.,
இந்நிலையில் பொள்ளாச்சியில் இருந்து பரம்பிக்குளம் சென்ற கேரளா மாநில அரசு பேருந்து டாப்ஸ்லிப் அருகே செல்லும் பொழுது சாலையில் காட்டு மாடுகளின் கூட்டம் நின்று இருந்ததை கண்ட ஓட்டுனர் பேருந்து நிறுத்தி உள்ளார் சிறிது நேரம் கழித்து காட்டு மாடுகள் சாலையை விட்டு நகர்ந்து சென்றது அப்போது பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போன் காட்டுமாடை வீடியோ எடுக்க முயன்றார் கோபம் கொண்ட காட்டு மாடு அவரை தாக்க முற்பட்டது இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டதால் காட்டு மாடுகள் அங்கிருந்து நகர்ந்து சென்றது.,
நமது செய்தியாளர் :சக்திவேல்