Followers

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது - 6 வனச்சரகங்களில் எட்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் 104 நேர்கோட்டு பாதையில் 416 வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.,

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் இந்த ஆண்டுக்கான குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கியது - 6 வனச்சரகங்களில் எட்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியில் 104 நேர்கோட்டு பாதையில் 416 வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.,



கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி,வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி  (டாப்ஸ்லிப்) மற்றும் உடுமலை அமராவதி என ஆறு வனச்சரகங்களை உள்ளடக்கியது.,

இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டு மாடு போன்ற வனவிலங்குகளும் அறிய வகை பறவை இனங்களும் வாழ்ந்து வருகின்றன.,

இங்கு ஆண்டுதோறும் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தேசிய புலிகள் ஆணையம் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது..



இதன்படி 2024 இந்த ஆண்டிற்கான குளிர்கால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் தொடங்கி இந்த கணக்கெடுப்பு பணியானது தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும்.,

இன்று முதல் 6 வன சரகங்களிலும் 104 நேர்கோட்டு பாதைகள் அமைத்து, ஒரு நேர் கோட்டு பாதைக்கு நான்கு பேர் வீதம் என 416 வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டு வனவிலங்குகளின் காலடித்தடம், எச்சம் மற்றும் வன விலங்குகளை நேரில் பார்த்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஜிபிஎஸ் கருவிகள் மூலம் பதிவு செய்யப்படுகிறது..



இந்த கணக்கெடுப்பு பணியானது இன்று தொடங்கி எட்டு நாட்களுக்கு நடைபெறும் எனவும் பின்பு இறுதியில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு தேசிய புலிகள் ஆணையத்திற்கு இந்த கணக்கெடுப்புகளை அனுப்பி வைக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.,


நமது செய்தியாளர்: வால்பாறை ரவிச்சந்திரன்

Post a Comment

Previous Post Next Post